செப்டெம்பருக்கு முன் நாட்டில் பெருமளவானோக்கு தடுப்பூசி

தற்போது கணிசமான சதவீதமானவர் களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ள ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ, சனத்தொகையில் பெருமளவானோருக்கு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும்  கேட்டுக் கொண்டார்.   தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட்-19 ஒழிப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஜூலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள், கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.


இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *