சூதாட்ட விடுதிகளை முறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் கசினோ தொழில் துறையை முறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதன் மூலம் தற்போது சூதாட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட வணிகச் சட்டத்தின் கீழ் உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், 1988 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க பந்தய வரிச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் தீர்மானம் முயல்கிறது.
—————–

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *