சுமார் 6 மணி நேரம் செயலிழந்த சமூக வலைத்தளங்கள்

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டோகிராம், மெசஞ்சர் ஆகிய சமூகவலைத்தளங்கள் நேற்று இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் செயலிழந்தன. இந்தச் சேவைகள் நேற்றிரவு 9.15 மணியளவில் இலங்கையில் தடைப்பட்டன. எனினும், நேற்று பகல் முதலே பல்வேறு நேரங்களில் உலகம் முழுவதும் தடைப்பட ஆரம்பித்து விட்டன.

 பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் என்பவை பேஸ்புக்கை தாய் நிறுவனமாகக் கொண்டவையாகும்.  இந்தத் தடை குறித்து பேஸ்புக் நிறுவனம், “மன்னிக்கவும் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. விரைந்து வேலை செய்கிறோம். எங்களால் முடிந்தவரை அதனை சரிசெய்வோம்”, என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனினும், செயலிழந்தமைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சமூக ஊடக செயல் இழப்புகளை கண்காணிக்கும் டவுன்டிடக்டர் இதுவரை ஏற்பட்ட செயல் இழப்புகளில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவித்துள்ளது.10.6 மில்லியன் பயனாளர்கள் இந்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது என டவுன்டிடக்டர் தெரிவித்துள்ளது.


2019லேயே இறுதியாக பேஸ்புக் இவ்வாறானதொரு செயலிழப்பை சந்தித்திருந்தது.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *