சுத்திகரிக்க எண்ணெய் இல்லாததால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது

சுத்திகரிப்பதற்கு மசகு  எண்ணெய் கிடைக்காததால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை சுத்திகரிப்பு நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுத்திகரிப்புக்கான மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவது இதுவே முதல் முறை.


டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது. அதுவரை மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்று சிபிசி தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.


எனினும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதால் நாட்டில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *