இன்று வெள்ளிக்கிழமை முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார். இதன்படி, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் மதுபான பாவனைக்கு விதிக்கப்ட்ட தடை தொடரும். அனைத்து திருமணங்களும் பதிவுத் திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.
இறுதிச்சடங்கில் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவகங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30 வீதம் வரையானவர்கள் அமர்ந்திருந்து உணவருந்த முடியும். மதுபானத் துக்கான தடை தொடரும்.
இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சமாக 50 பேரைக் கொண்டதாக மண்டபத்தில் நடத்தலாம்.
Reported by : Sisil.L