இலங்கைக்கு இயற்கை உரத் தொகுதியொன்றை அனுப்பிய சீன நிறுவனம் கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றியுள்ளது.
இலங்கையில் தமது உரப் பொருட்களை ஏற்காததால் நஷ்ட ஈடு கேட்டு சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
8 மில்லியன் டொலரை நஷ்டஈடாகக் கோரியதோடு, கப்பல் போக்குவரத்து மற்றும் சட்டக் கட்டணங்களையும் இலங்கை அரசாங்கம் ஈடுசெய்யுமாறு கோரியுள்ளனர்.
இயற்கை உரத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவற்றை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L