உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael Kovrigம் சீன விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் கனடாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
வடகொரியா மற்றும் சீனாவில் பணியாற்றிய கனேடிய தொழிலதிபரான Michael Spavor என்பவரும், முன்னாள் கனேடிய தூதரக அலுவலரான Michael Kovrig என்பவரும் உளவு பார்த்ததாக சீனாவால் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் கனடா நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உண்மையில், இந்த விடயத்துக்குப் பின்னால் சீனாவின் கபட நாடகம் ஒன்று உள்ளது. 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் சீன நிறுவனமான Huawei Technologieயின் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou என்னும் பெண்மணி, வான்கூவரில் வைத்து கனடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கனடா அவரை கைது செய்ததால், உடனடியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா கனேடியர்களான Michael Spavorஐயும், Michael Kovrigஐயும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L