சிவப்பு, வெள்ளைப் பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சிவப்பு மற்றும் வெள்ளைப் பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 210 ரூபாவை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.


இதன்படி, இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
—————-

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *