கனடாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் தடுப்பூசிக்கு மக்கள் மறுப்பு தெரிவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரொறன்ரோவின் சென்ட் மைக்கேல் மருத்துவமனை முன்னெடுத்த குறித்த ஆய்வானது செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 14,500 கனேடிய மக்கள் இந்த ஆய்வில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 2020 டிசம்பர் மாதம் தொடங்கி 2021 பெப்ரவரி வரையில் குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 9% கனேடிய மக்கள் தாங்கள் ஒருபோதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றே தெரிவித்துள்ளனர்.
அல்பர்ட்டா பிராந்தியத்தில் 16% மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். Manitoba மற்றும் Saskatchewan மக்களில் 14% தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், பூர்வகுடி மக்களில் 15% பேரும் தடுப்பூசிக்கு மறுத்துள்ளனர். கனேடிய ஆண்களைப் பொறுத்தமட்டில் மொத்தமாக 11% பேரும் பெண்களில் 8% பேரும் தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 40 முதல் 59 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைவு என்றே பதிவு செய்துள்ளனர். இதில் 12% பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
———————-
Reported by : Sisil.L