சினோபார்ம் தடுப்பூசி தொடர்ந்து வைரஸை எதிர்த்துப் போராடும்: ஆய்வு முடிவு

சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப் பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, செல் உயிரியல் பணிப்பாளர், கலாநிதி சந்திம ஜீவந்திர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
சினோபார்மின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 12 வாரங்களுக்குப் பிறகும், கொவிட் வைரஸுக்கு எதிரான டி செல்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் கவலைக்கிடமான நிலைக்குச் செல்வது குறித்து மேலும் ஆய்வு தேவை என்றும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.                  

——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *