சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் பெரும்பாலானோர் கொவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 75 வீதம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 4 வாரங்களில் 1096 பேருக்கு கொவிட் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 484 பேர் அல்லது 44 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 30 சதவீதமானோர் ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே பெற்றுள்ளனர். 25 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை.
இதேவேளை கடந்த 14 நாட்களில் பதிவான தொற்றாளர்களில் 88 சதவீதமானோர் தடுப்பூசி போட்ட 61 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
சிங்கப்பூர் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட வயதானோரின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதாக தரவு காட்டுகிறது.
Reported by : Sisil.L