தற்போது சவர்க்காரம் மற்றும் சலவை சவர்க்காரத்துக்கு சந்தையில் அதிக தேவை இருப்பதாகவும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
வரும் வாரத்தில் சவர்க்காரம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையை சவர்க்கார நிறுவனங்கள் உயர்த்தும் என விற்பனையாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, நுகர்வோர் விலை ஏறும் முன்பே சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் குவித்து வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
சவர்க்காரம் மற்றும் தொடர்புடைய பொருட்களின் விலை சுமார் 200% அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் ஏற்கனவே வர்த்தக சமூகத்துக்கு தெரிவித்துள்ளன.
—————–
Reported by : Sisil.L