சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் உப தலைவராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் 11ஆவது மாநாட்டில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச அமைப்பின் தற்போதைய தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் செயற்படுகின்றார்.
சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனமானது தலைவர் ஒருவரையும் 02 உப தலைவர்களையும் கொண்டுள்ளது.
அதற்கமைய உப தலைவர் பதவிகளுக்கு இலங்கை மற்றும் தென் கொரிய பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
44 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச அமைப்பான சர்வதேச பசுமை மேம்பாட்டு நிறுவனமானது, உறுப்பு நாடுகளின் பசுமை மேம்பாடு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கும் அமைப்பாக காணப்படுகின்றது.இந்த நிறுவனத்துடன் இலங்கை தற்போது காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
Reported by :Maria.S