சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறுமாறு கூறுவது முட்டாள்தனமானது- வாசுதேவ நாணயக்கார

இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறுமாறு எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாய்லாந்து, தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு நாணய நிதியம் கடன் வழங்க நிதி நிபந்தனைகளை விதித்து அதன் மூலம் இந்த நாட்டின் அழிவு மேலும் விரிவடையும் என்றார்.


எனவே அந்த நிதியத்திலிருந்து கடன் பெறுவதற்கு தமது கட்சி எவ்வித உதவியும் வழங்காது எனவும் அவர் தெரிவித்தார்.
——————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *