சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர்.

ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள்  2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை,  நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான வெளிப்படையான, பொறுப்பான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பரிசீலிக்கத் தவறிவிட்டதாக நான்கு அமெரிக்க செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *