சந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமடையாமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், வங்கிகள் மற்றும் மத்திய வங்கியில் வைப்பிலிடப்படும் நிதிக்கான வட்டி அல்லது வழக்கமான வைப்பு வீதம் 14.5 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு கடன் வழங்கும் போது மத்திய வங்கியால் அறவிடப்படும் வட்டி வீதம் அல்லது வழமையான கடன் வசதி வீதம் 15.5 ஆக காணப்படல் வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, மத்திய வங்கியின் நாணய சபை வட்டி வீதத்தை பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
Reported by :Maria.S