அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனைகளின் எண்ணிக்கை 670 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சட்ட விரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 675 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சோதனையில் 21,636 லீற்றர் பெட்ரோல், 33,462 லீற்றர் டீசல், 11,100 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதனுடன் தொடர்புடைய சோதனைகள் தொடரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான மோதலை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் காணொளியை பதிவு செய்யுமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர இந்த காட்சிகள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
———-
Reported by:Anthonippillai.R