சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் துபாய்க்கு தொழிலுக்காக பெண்களை அனுப்பிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த பெண் ஒருவரை சுற்றுலா விசாவினூடாக துபாய்க்கு தொழிலுக்கு அனுப்பிய போதும், உறுதி வழங்கப்பட்டதற்கு அமைய தொழில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறையிலும் பெண் ஒருவர் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவரும் அவருக்கு உதவி செய்தவரும் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Reported by :Maria.S