கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடிய மாணவர் செயற்பாட்டாளர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

200 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இன்று (26) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடிய மாணவர் செயற்பாட்டாளர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் செயற்பாட்டாளர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

200 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கெலும்  முதன்னாயக்க  மற்றும் தில்ஷான் ஹர்ஷன ஆகியோரை விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், மாணவர்கள் கலைந்து செல்வதற்கு அவர்கள் கால அவகாசம் வழங்கியிருந்தனர்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி செல்ல முற்பட்ட போது, ​​பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை கலைத்தனர்.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *