கொழும்பு மாவட்டத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 90 சதவீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் 7 ஆயிரம் தொற்றாளர்கள் தற்போது வீடுகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L