நத்தார் காலம் மற்றும் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும், குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள்வதற்கு சிவில் உடையில் பொலிஸாரை அதிக அளவில் நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மோட்டார் சைக்கிள் பயணங்கள் மற்றும் ரோந்துகளை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
————————–
Reported by : Sisil.L