கொரோனா வைரஸின் நீண்ட கால அறிகுறிகள் குறித்து புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டு 90 -180 நாட்களின் பின்னர் காணப்படக்கூடிய நோய் அறிகுறிகள் குறித்து தெரிய வந்துள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அசாதாரணமான சுவாசம்,வயிற்று அறிகுறிகள், கவலை, மன அழுத்தம், மார்பு, தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, தசை வலி குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவலை, மன அழுத்தம் ஆகியவற்றினால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 15 வீதமும் ஏனைய நோய் அறிகுறிகள் 8 முதல் 10 வீதமும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்களிடம் இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L