கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக முனைப்பு காட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வதிவிடப் பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமை உள்ளிட்ட தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L