கொடக்கவெல ஆடைத் தொழிற்சாலையில் 26 பேருக்கு கொரோனா

கொடக்கவெல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 30 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில்  26 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளது.

 
பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை கடந்த 26ஆம் திகதி மூடப்பட்டது.
இதன்விளைவாக தொற்றாளர்களுடன் தொடர்புடைய 150 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 
தொழிற்சாலை நிர்வாகம் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்ததால் இந்நிலைமை ஏற்பட்டதாக சுகாதாரத் துறை குற்றம் சாட்டுகிறது.

 
“ஆடைத் தொழிற்சாலையின் அலட்சியம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 45 தொற்றாளர்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளனர்” என கொடக்கவெல பொதுச்சுகாதார ஆய்வாளர் விபுல குமார தெரிவித்தார்.
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *