கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகளை நீண்டகாலமாக சிறுவர்கள் பயன்படுத்துவது தூக்கமின்மை மற்றும் நினைவாற்றல் குறைபாட்டுக்ககு வழிவகுக்கின்றது என மனநல மருத்துவர் நீல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைக் கூறினார்.
தூக்கமின்மை அவர்களின் நினைவாற்றலைக் குறைப்பதாகவும் தற்போதைய கொவிட் நிலைமையில் கல்வி நோக்கங்களுக்காக சிறுவர்கள் கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் கூட அவற்றுக்கு அடிமையாகக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
—————–
Reported by : Sisil.L