கேரளாவில் பாத்திரத்தை படகாக மாற்றித் திருமணம்

கேரளாவில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (ஒக்.18) திங்களன்று திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.


 இவர்களின் திருமணம் தளவாடி பனையண்ணூர்காவு தேவி கோயிலில் நடைபெற இருந்தது. ஆனால் கனமழை காரணமாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.திருமண நடைபெறும் இடத்திற்குச் செல்ல மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மணமக்களை பெரிய வெண்கலப் பாத்திரத்தில் ஏற்றி படகாக மாற்றி வெள்ளத்தில் அரை கிலோ மீற்றர் அழைத்துச் சென்று திருமணத்தை நடத்தி முடித்தனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *