குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.2 ஆல் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பக் கட்டணம் 16 ரூபா என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, தற்போது குறைந்தபட்ச பஸ் கட்டணமாகவுள்ள 14 ரூபாவானது 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.


இதேவேளை, பஸ் கட்டணத் திருத்தம் புதன் கிழமைக்குள் அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


முன்னதாக, அனைத்து செலவீனங்களையும் கருத்திற் கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
———————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *