திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி படகுப் பாதை விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட படகுப் பாதை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளரும் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாக்கேணியில் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
————————
Reported by : Sisil.L