திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாங்கேனி பிரதேசத்தில் மோட்டார் இழுவைப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் பால நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந் தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிந்திய தகவல்களின் படி மாணவர்கள் 8 பேர், ஆசிரியை ஒருவர் மற்றும் முதியவர் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
————————
Reported by : Sisil.L