தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறுகள் இன்றி நீர் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது பெறப்பட்டுள்ள நீர்க் கட்டணம் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு நீர் வழங்கல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்ச்சியான கண்காணிப்புச் செலவு மற்றும் மூலதனக் கடன் சேவைப் பொறுப்பை ஈடுகட்ட இந்தத் திருத்தம் உதவும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை மத ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு குறிப்பிட்ட நுகர்வு வரம்பு வரை சலுகைகளை வழங்கவும் அமைச்சு முன்மொழிந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு குடிநீர் கட்டணத்தை சீரமைக்க முடிவு செய்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————-
Reported by : Maria.S