பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாகக் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளன.
கால்நடைத் தீவனத்தை முறையாக உற்பத்தி செய்யாமையே இந்த நிலைக்குக் காரணம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வருடம் இலங்கை பாரிய போஷாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதிக் குழு அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தித் துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
—————————-
Reported by :Maria.S