காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல்கேரிய பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல்கேரிய பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய கல்கிசை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் நேற்று(08) ஹெவ்லொக் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக சம்பவத்துடன் தொடர்புடைய பல்கேரிய பிரஜையொருவர் வௌ்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு தயாராகவிருப்பதாக குறித்த பல்கேரிய பிரஜையூடாக தெரியவந்தது.

அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக தப்பிச்செல்ல முற்பட்ட பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

கொள்ளைச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் அதன் சாரதி பிட்டிகல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள ATM இயந்திரங்களில் இருந்து, 57 இலட்சம் ரூபா, 48 இலட்சம் ரூபா மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *