யாழ். காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூற்றுக்கும் அதிகமானோர் பங்கு கொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.
காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பி. சி.ஆர் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. அவர்களில் 05, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15 வயதுடைய 13 சிறார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
———————
Reported by : Sisil.L