காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட கனேடிய குடும்பத்தினர்

கல்கரியில் இந்த வார ஆரம்பத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் குடும்பத்தினர் புகைப்படம் வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பில் கல்கரி பொலிஸார் வெளியிட்ட தகவலில், 20 வயது கடந்த Sheriz Crane என்பவர் குறித்து மொத்த குடும்பமும் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


மேலும், காணாமல் போனவரிடம் பலமுறை தொடர்பு கொண்டும் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மாயமான Sheriz Crane ஒரு மாதம் முன்னர் Forest Lawn பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.


கறுப்பு அல்லது சாம்பல் வண்ண லொறி ஒன்றின் அருகில் நபர் ஒருவருடன் அவர் காணப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் குடியிருப்புக்குத் திரும்பவில்லை என்றே குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் கல்கரி பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *