காகிதத் தட்டுப்பாட்டால் பாடப் புத்தகங்கள் அச்சிடுதல் நிறுத்தம்

காகிதத் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமை யாளர் ரஞ்சித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 
பாடசாலை பாடப் புத்தகங்களின் 40 இலட்சம் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் தாள்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் தொன் தாளின் விலை 2 இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளது.  


பாடப் புத்தகங்களை அச்சிடுவதே அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முக்கிய வருமானம். இதை இழந் தால் நிறுவனத்துக்கு சுமார் 120 கோடி ரூபா இழப்பு ஏற்படும். முன்னதாக, அரச நிறுவனங் களுக்கு ஆவணங்களை வழங்குவதற்குத் தேவையான கடதாசியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வும் இரண்டு  லொத்தர் சீட்டு கள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டன என்றும் கூறினார்.
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *