நாட்டில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பத்திரிகைகள் அச்சிடும் தாளுக்கும் (News Print) அதீத பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட முடியாத நிலை உருவாகி வருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால், காகிதங்கள் உட்பட பொருட்களின் இறக்குமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. பத்திரிகை நிறுவனங்கள் களஞ்சியப்படுத்திய அல்லது பலம டங்கு விலை கொடுத்து காகிதங்களைக் கொள்வனவு செய்ததன் மூலமாக அண்மை நாட்களாக பத்திரிகைகள் வெளியாகி வருகின்றன. இதனால் அச்சிடும் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக பத்திரிகைகளை அச்சிடுவதற்கான செய்தித் தாள்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பத்திரிகைகளின் – அதிலும் குறிப்பாக பிராந்தியப் பத்திரிகைகளின் வெளியீடுகள் நின்று போகும் நிலை எழுந்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தில் பொருளாதாரத் தடை நீடித்த காலப் பகுதியில் 1992 – 1995 வரையான காலப் பகுதியில் அப்பியாசப் புத்தகங்களின் தாள்களிலும் (CR Book Sheet), கோப்பு மட்டைகளிலும் (File மற்றும் Bristel Boarrd) பத்திரிகைகள் வெளியாகியிருந்தன. பின்னர் 2006ஆம் ஆண்டு ஏ-9 வீதி மூடப்பட்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியிலும் கூட யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிலைமை உருவாகியிருந்தது.
தற்போது அத்தகையதொரு இக்கட்டான நிலை பத்திரிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
——————
Reported by : Sisil.L