கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று (14) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மற்றும் வடக்கு மாகண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாகவும் இடம் பெற்ற குறித்த கவனிப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை கோரியும் நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் குறித்த கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த பணியாளர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் பின்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கான கடிதத்தினை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் பொன்னம்பலம் வாகிசன் அவர்களிடம் கோரிக்கை அடங்கிய மேற்படி கடிதத்தை கையளித்தனர்.

ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப் படுத்தும் குறித்த பணியை தமக்கு இது வரையும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

என்றும் தமக்கான ஊதியம் 22,000 வரையே கொடுக்கப்படுகிறது எனவும் இதனைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளமையினால் உரிய அதிகாரிகள் தமது ஊதியம் தொடர்பான கோரிக்யிணையும் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையிணையும் நிறைவேற்ற வேண்டும் என இதன் போது கேட்டுக் கொண்டனர்.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *