கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய தமிழ் வம்சாவளிப் பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவில் இம்முறை இடம்பெற்றுள்ள பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன்படி ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாகத் தெரியவருகிறது.
இந்த நிலையிலேயே லிபரல் கட்சி சார்பில் Oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
Reported by : Sisil.L