கருக்கலைப்பு தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், கனடா மக்களின் மன நிலை தொடர்பில் கருத்துக்கணிப்பொன்று வெளியாகியுள்ளது.
கனடாவில் தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்த ஆய்வில், ஐந்தில் நால்வர் கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், குறித்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 14% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, கருக்கலைப்புக்கான உரிமை கோரும் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைமை கனடாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தாங்கள் கருதுவதாக கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் கூறியுள்ளனர்.
1988ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக கருக்கலைப்பு செய்து கொள்வது கனடாவில் குற்றமற்றதாகவே கருதப்படுகிறது, ஆனால் அதை சட்டமாக மாற்றுவதற்கு இதுவரை எந்த சட்டமூலமும் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் இது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தின் கீழ் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமையாகக் கருதப்படவில்லை. இந்த நிலையில், கனேடிய அரசாங்கம் கருக்கலைப்பு செய்வதற்கு சுதந்திரமாகத் தெரிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மூன்றில் இருவர் கருத்துக் கணிப்பில் பதிலளித்தனர்.
————————
Reported by : Sisil.L