கனேடியத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களைப் பெறும் திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களை தகுதிப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கனேடிய அரசாங்கத்தால் தொழிலாளர்களுக்கான ஊரடங்கு கால ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு, விண்ணப்பிக்க வேண்டிய நாள் டிசம்பர் 22ஆம் திகதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதில் தகுதியான தொழிலாளர்கள் 2022 மே மாதம் 7ஆம் திகதி வரையில் ஒவ்வொரு வாரமும் 300 டொலர் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தத் திட்டத்தில் மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் தகுதி பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 2022 பெப்ரவரி 12ஆம் திகதி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை வரிகள் போக வாரம் 270 டொலர் ஊக்கத்தொகையைப் பெற தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் இந்த நிபந்தனையால் எந்த மாகாணத்திலும் அல்லது பிரதேசத்திலும் தொழிலாளர்களால் விண்ணப்பிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் தற்போது நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ள அரசாங்கம் பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்ட்டா, ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கோடியா உட்பட பல பகுதிகளை இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
—————————–
Reported by : Sisil.L