கனடாவில் நாளை(திங்கள்) 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான தர்மசேன யகண்டவெல போட்டியிடவுள்ளார்.
அவர் பொதுத் தேர்தலில் NDP ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அபோட்ஸ்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து 5 வேட்பாளர்கள் அந்த இடத்துக்குப் போட்டியிடுகின்றனர். தர்மசேன யகண்டவெல கனேடிய குடிவரவு வழக்கறிஞர்.
வேட்பாளர் தர்மசேன இதுவரை சுமார் 5,000 குடும்பங்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி கனடாவில் நிரந்தரமாக குடியேற உதவினார் எனக் கூறப்படுகிறது.
Reported by : Sisil.L