கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,691 பேர் பாதிக்கப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 18 இலட்சத்து 56 ஆயிரத்து 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு 43 ஆயிரத்து 339 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் 2,720 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 83ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர்.
Reported by : Sisil.L