கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரி.ரி.சியில் டிக்கட் இன்றிப் பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிக்கட் இன்றிப் பயணம் செய்வோருக்கு 425 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கட் இன்றி பயணம் செய்பவர்களால் வருடாந்தம் பல மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக ரி.ரி.சி.யின் பேச்சாளர் ஸ்டுவர்ட் கிறீன் (Stuart Green) தெரிவித்துள்ளார்.
கட்டணம் செலுத்தத் தவறும் பயணிகளினால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 70 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அண்மைய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தப் பயணிகளில் 3 வீதமானவர்கள் இவ்வாறு கட்டணங்களை செலுத்த தவறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டணம் செலுத்தாதவர்களைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இன ரீதியான அடிப்படையில் செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் சரியான முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டு கட்டணம் செலுத்துவதை தவிர்ப்போரை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரி.ரி.சி.தெரிவித்துள்ளது.
———–
Reported by :Maria.S