கனடாவில் பிள்ளைகளுக்காக பெற்றோர் பெருந்தொகை பணம் செலவிட்டு வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக கனடாவின் முன்னணி வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் முதல் தடவையாக வீடுகளைக் கொள்வனவு செய்வோரில் 9 வீதமானவர்களுக்கு அவர்களது பெற்றோரின் நிதி உதவி கிடைக்கப் பெறுகின்றது என கனடாவின் முன்னணி வங்கியான சீ.ஐ.பி.சீ வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, முதல் தடவையாக வீடுகளைக் கொள்வனவு செய்வோருக்கு சராசரியாக 82000 டொலர் நிதி உதவி வழங்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் கடந்த ஆண்டில் (2020) மட்டும் பெற்றோர்களால் வயது வந்த பிள்ளைகள் வீடு கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றோர்களால் வழங்கப்படும் உதவியினால் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மேலும் விரிவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
—————-
Reported by : Sisil.L