கனடாவில் பூர்வகுடி மக்களுக்கு காலாவதியான தடுப்பூசி

ஒன்ராறியோவில் பூர்வகுடி மக்களுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக காலாவதியான கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதி வரையில் சுமார் 71 டோஸ் காலாவதியான தடுப்பூசிகள் பூர்வக்குடி மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.


தடுப்பூசிகளின் காலாவதி திகதியைக் குறிப்பிட்டு செவிலியர்கள் தடுப்பூசி மையங்களுக்கு அளித்துள்ளனர். ஆனால் குளிரூட்டப்பட்ட அறைகளில் குறித்த தடுப்பூசிகள் பாதுகாக்கப்படாமல் அவை காலாவதியானது தொடர்பில் செவிலியர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றே இதற்கு விளக்கமளிக் கப்பட்டுள்ளது.


மேலும் ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் ஒக்டோபர் மாதத்திலேயே காலாவதியாகும் என்பது செவிலியர்கள் கூறிய விளக்கம்.


உண்மையில் அந்தத தடுப்பூசிகள் குளிரூட்டப்படாமல் இருந்துள்ளதால் அதன் காலாவதி வெறும் 31 நாட்களில் முடிவடைகிறது. புதிய காலாவதி திகதியானது தடுப்பூசிகளுக்கான பெட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள், ஆனால் தடுப்பூசி குப்பிகளில் குறிப்பிடப்படவில்லை.


சில பூர்வகுடி மக்களுக்கு குறித்த தடுப்பூசி காலாவதியானதன் அடுத்த நாள் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிலருக்கு சில வாரங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ளது.

 
தற்போது காலாவதியான தடுப்பூசி பெற்றுக்கொண்ட பூர்வகுடி மக்களை சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *