கனடாவில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கின் குற்றவாளி பிணையில் விடுவிப்பு

ஒன்ராறியோவின் லண்டனில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கு குற்றவாளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயதான அலியன் அகமது என்பவரே அவரது பெற்றோர் அளித்த 10,000 டொலர் பிணைத்தொகையின் மேல் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த சனிக்கிழமை வெஸ்டன் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் Gabriel Neil(18) பல்கலைக்கழக வளாகம் அருகே கொடூரமாக தாக்கப்பட்டார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


இந்த வழக்கில் 21 வயதான அலியன் முகமது கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை நடந்த பிணை தொடர்பான விசாரணைக்குப் பிறகு அலியன் முகமது விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பம் வெளியிட்ட அறிக்கையில், Gabriel Neil-ன் இழப்பிலிருந்து நாங்கள் இன்னமும் வெளிவரவில்லை. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வெஸ்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர் Gabriel Neil. இறுதியில் சடலமாக மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *