கனடாவில் திரும்பப் பெறப்படும் Peanut Butter பொருட்கள்

சால்மோனெல்லா பாதிப்புக்கான  சாத்தியம் இருப்பதால், peanut butter தயாரிப்புகள் சில கனடாவில் திரும்பப்பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்க நிறுவனமான J. M. Smucker Co. தாமாகவே முன்வந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


குறித்த நிறுவனத்தின் 11 வகையான தயாரிப்புகள் கனடாவில் விற்கப்பட்டு வருகின்றன. குறித்த தயாரிப்புகளில் 1274425 இருந்து 2140425 வரையான இலக்கங்கள் கொண்ட ஜாடிகளை உடனடியாக அகற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அமெரிக்காவில் குறித்த நிறுவனத் தயாரிப்பை பயன்படுத்திய 14 பேர் பாதிக்கப்பட்டதுடன், இருவர் மருத்துவமனை சிகிச்சையை நாடியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்தே குறித்த நிறுவனம் அவர்களின் குறிப்பிட்ட தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவில் சால்மோனெல்லா பாதிப்பு  12 மாகாணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. FDA வெளியிட்டுள்ள தகவலின்படி, சால்மோனெல்லா அறிகுறிகளாக காய்ச்சல், இரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.


Reported bu: anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *