கனடாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் இன்னமும் கடுமையான வெப்பநிலை உச்சத்தை தொடவில்லை என கனடிய வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலையை விடவும் இந்த ஆண்டில் கூடுதல் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையான கோடை காலங்களை விடவும் இந்த ஆண்டு கோடை காலம் மோசமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
மானிட்டோபா, விண்ணப்பிக், ரெஜினா, கல்கறி போன்ற பல்வேறு இடங்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் என அண்மைய நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் அடிக்கடி காட்டுத் தீயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அண்மையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 1200 ஹெக்டேயர் பகுதி பாதிக்கப்பட்டிருந்தது.
வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ் வரையில் நிலவும் என வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
———-
Reported by :Maria.S