கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலங்களில் 4,002பேர் பாதிக்கப்பட்டதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 25 ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 55ஆயிரத்து 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19ஆயிரத்து 172 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 10ஆயிரத்து 095பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L