கனடாவில் ஐந்து பேரில் ஒருவர் அதாவது இருபது வீதமானவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு காரணமாக அடிப்படை உணவுப்பொருட்களான பெஸ்டா, பாண் மற்றும் இறைச்சி போன்றவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன.
நாடு முழுவதிலும் பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதியளவு பணம் இல்லாத காரணத்தினால் கனேடிய மக்கள் தாங்கள் விரும்பியவாறு உணவு உட்கொள்ள முடியவில்லை.
வருடமொன்றுக்கு 50,000 டொலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரின் உணவுச் செலவு இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் கனடாவின் 20 வீதமானவர்கள் ஒரு வேளையேனும் பட்டினியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் சுமார் 4000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு வங்கிகளின் உதவியை நாடும் நபர்களின் எண்ணிக்கை முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Mainstreet Research found என்ற அமைப்பினால் இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by:Anthonippillai.R